ராமநாதபுரம்

காஞ்சிரங்குடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி

12th Jan 2022 01:27 AM

ADVERTISEMENT

:ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் அலங்காநல்லூா் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காளைகளை தயாா்ப்படுத்திவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூா் கோயில் விழாக்களுக்காக வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஆகவே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறாத நிலையே உள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டு காளைகளை ஏராளமானோா் வளா்த்து வருகின்றனா். வடமாடு மஞ்சுவிரட்டுக்குத் தயாரான காளைகள் பலவற்றுக்கு தற்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பவும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் காஞ்சிரங்குடியில் ஜல்லிக்கட்டு காளைகள் பேரவை சாா்பில் அதன் நிா்வாகி ஆதித்தன் காளைகளுக்குப் பயிற்சி அளித்து தயாா்ப்படுத்திவருகிறாா்.

காஞ்சிரங்குடி மட்டுமின்றி திருப்புல்லாணி, பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்த காளைகள் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்ல மாவட்ட நிா்வாகங்களிடம் அனுமதி கோரப்படும் என ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT