ராமநாதபுரம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

1st Jan 2022 08:57 AM

ADVERTISEMENT

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா், மறுவாழ்வு மையங்களில் இருப்பவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 10 கிராம் முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

பரிசுத் தொகுப்பு ஜனவரி 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

மாவட்டத்தில் 775 நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 335 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆட்சியா் நேரில் சென்று நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிா்த்திடும் விதமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் முறையாக விநியோகிக்கபடுவதை மாவட்ட வழங்கல் அலுவலா் உறுதி செய்யவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT