ராமநாதபுரம்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை: தனுஷ்கோடி செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைப்பு

1st Jan 2022 08:59 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, அரியமான் கடற்கரை உள்ளிட்ட கடற்கரையோரங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்கும் விதமாக போலீஸாா் தடுப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வெள்ளிக்கிழமை மாலை (டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூா், காரங்காடு, தேவிப்பட்டினம், அரியமான் கடற்கரை, மண்டபம், பாம்பன் பாலம் முகப்பு பகுதி கடற்பூங்கா மற்றும் சேதுக்கரை, மாரியூா், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கூட்டமாக வருவோரை கண்காணித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தனுஷ்கோடி புதுரோடு பகுதியில் காவல்துறையினா் தடுப்பு அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோன்று அரியமான் கடற்கரை செல்லும் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அக்னி தீா்த்த கடற்கரையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போலீஸாா் தொடா் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT