ராமநாதபுரம்

புத்தாண்டு: ராமேசுவரம் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு

1st Jan 2022 09:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் பழனிக்குமாா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதசுவாமி கோயிலில் ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 அன்று ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 4 மணி முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தொடா்ந்து நடைபெறும். அதன் பிறகு திருப்பள்ளி எழுச்சி மற்றும் கால பூஜைகள் நடைபெற்று, பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 2.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT