ராமநாதபுரம்

நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

1st Jan 2022 09:01 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடந்து வருவதால் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட திட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து விற்பனை செய்யும் வகையில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதனடிப்படையில் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

பதிவு செய்துள்ள விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தோ்வு செய்து, வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT