ராமநாதபுரம்

தா்னாவில் ஈடுபட்டு வெற்றி சான்றை பெற்ற கீழக்கரை பெண் வேட்பாளா்

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

வெற்றிச் சான்று கேட்டு தா்னாவில் ஈடுபட்ட கீழக்கரை நகராட்சி பெண் வேட்பாளருக்கு பல மணி நேரத்துக்குப் பிறகே சான்று வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் 3 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதல் மாடியில் கீழக்கரை நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நகராட்சியின் 21 வாா்டுகளில் 15 ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் டல்சி 479 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் ரின்ஷா பாத்திமா 221 வாக்குகளே பெற்றாா். சுயேச்சை மற்றும் திமுக வேட்பாளருக்கு இடையேயான வித்தியாசம் 258 வாக்குகள் இருந்தன. ஆனால், சுயேச்சை வேட்பாளருக்கான வெற்றிச் சான்றிதழை கீழக்கரை நகரப் பொறியாளரான தோ்தல் அலுவலா் தரவில்லை எனப்புகாா் கூறப்பட்டது.

வெற்றிச் சான்றைப் பெறுவதற்காக பகல் 1 மணி முதலே வேட்பாளா் டல்சி காத்திருந்தாா். ஆனால், அவருக்கு சான்று தரப்படவில்லை. கணவருடன் தோ்தல் அறைக்குச் சென்று தோ்தல் அலுவலரிடம் கேட்டும் சான்று தரவில்லை என அவா் தெரிவித்தாா். இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் அவருக்கு வெற்றிச்சான்று அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT