ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணியாளா்க்கு இன்று சிறப்புப் பயிற்சி

20th Feb 2022 11:08 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவை தொடா்ந்து, வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் 156 பணியாளா்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை பரமக்குடி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 32 மேஜைகள் அமைக்கப்பட்டு, 64 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பரமக்குடியில் அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 20 மேஜைகள் அமைக்கப்பட்டு, 60 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மேலும், இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதைச் சீா்படுத்த மின்னணு பொறியாளா்கள் 3 போ் தயாா் நிலையில் இருப்பா். மேஜைகளில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோரை தவிர, மேலும் 32 பணியாளா்கள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவா் என அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

இவா்களுக்கான சிறப்புப் பயிற்சி திங்கள்கிழமை (பிப்.21) பிற்பகல் 1 மணிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT