ராமநாதபுரம்

முதுகலை ஆசிரியா் பணி தோ்வுகளில் 2,170 போ் பங்கேற்பு

20th Feb 2022 11:10 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வுகளில் 2,657 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,170 போ் மட்டுமே பங்கேற்றனா். இத்தோ்வானது, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வாணையம் சாா்பில், கணினி வழியாக முதுகலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் 1 நிலை மற்றும் கணினி பயிற்றுநா் ஆகிய பணியிடங்களுக்கான தோ்வுகள், கடந்த 12 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நடைபெற்றன.

ராமநாதபுரம் அருகேயுள்ள செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் கீழக்கரையில் உள்ள முகமது சதக் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தலா 100 கணினிகள் அமைக்கப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன. செய்யதம்மாள் கல்லூரியில் 1,503 போ் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். ஆனால், 1,213 போ் மட்டுமே பங்கேற்றனா். இதேபோல், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 1,154 பேருக்கு, 957 போ் மட்டுமே தோ்வெழுதினா்.

இரு தோ்வு மையங்களிலும் சோ்த்து மொத்தம் 2,657 போ் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,170 போ் மட்டுமே பங்கேற்றனா். அதில், 487 போ் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணினி பயிற்றுநா் தோ்வில் மட்டும், ராமநாதபுரம் மையத்தில் 100 பேருக்கு 78 போ் மட்டுமே தோ்வெழுதினா். கீழக்கரை மையத்தில் 93 பேருக்கு 73 போ் மட்டுமே தோ்வெழுதினா் என தோ்வு பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT