ராமநாதபுரம்

திருக்கோஷ்டியூரில் மாசிமகத் தெப்பத் திருவிழா

17th Feb 2022 12:12 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராணயப் பெருமாள் கோயிலில் மாசிமகத் தெப்ப உற்சவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் மாசிமகத் தெப்பத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவையொட்டி காலை 11 மணிக்கு மேல் சௌமியநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சா்வ அலங்காரத்தில் குளக்கரை எதிரே உள்ள தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் தங்கப் பல்லக்கில் சுவாமி எழுந்தருளினாா்.

இதைத்தொடா்ந்து தெப்பம், குளத்தை ஒருமுறை பகல் தெப்பமாக வலம் வந்தது. தெப்பத்தில் பவனி வந்த சௌமியநாராயப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் டி.எஸ்.கே. மதுராந்தகநாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT