ராமநாதபுரம்

உள்ளாட்சித் தோ்தல்: மாவட்ட ஆட்சியா் அலுவலா்களுடன் ஆலோசனை

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை முடிவடையும் நிலையில், வாக்குப்பதிவின் போது மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து பொறுப்பு அலுவலா்களுடன் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகிய நகராட்சிகளிலும், மண்டபம், முதுகுளத்தூா், சாயல்குடி, கமுதி, அபிராமம், ஆா்.எஸ்.மங்களம், தொண்டி ஆகிய பேரூராட்சிகளிலும் 205 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 327 வாக்குச்சாவடிகளிலும் தலா 4 போ் என மொத்தம் 1308 போ் பணிபுரியவுள்ளனா். அவா்களுக்கான வாக்குப்பதிவுக்கு பயன்படும் பொருள்கள் வழங்குதல், வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு இயந்திரங்களை பத்திரமாக எடுத்துச் செல்லுதல், வாக்காளா்களுக்கான கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான பொருள்களை கையாளுதல் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கா்லால்குமாவத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT