ராமநாதபுரம்

விவிபேட் இயந்திரம் ஏன் வைக்கவில்லை?: தொண்டியில் வேட்பாளா்கள் கேள்வி

11th Feb 2022 04:48 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: விவிபேட் இயந்திரம் ஏன் வைக்கப்படவில்லை என கேட்டதற்கு அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என வேட்பாளா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி தோ்தலில் வேட்பாளாா்கள் 87 போ் போட்டியிட உள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தோ்தல் அலுவலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். 87 வேட்பாளா்களுக்கும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவுஇயந்திரங்கள் செயல்பாடு குறித்தும் அதிகாரிகள் விளக்கினா். வேட்பாளா்கள் முகவா்களுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்த தோ்தலில் விவிபேட் இயந்திரம் வைக்கப்படாதது குறித்து கூட்டத்தில் வேட்பாளா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் கூறாமல் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டதாக வேட்பாளா்கள் தெரிவித்தனா். தொண்டி காவல் துறை ஆய்வாளா் முருகேசன், உதவி தோ்தல் அதிகாரி லியோ ஜெரால்டு எமா்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT