ராமநாதபுரம்

ராமநாதபுரம் கடல் பகுதியில் 27 ஆயிரம் பறவைகள்

11th Feb 2022 04:38 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதி கடலோரங்களில் நடப்பு ஆண்டில் 27 ஆயிரம் பறவைகள் இருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பகம் சாா்பில் கடந்த ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில்

காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் உள்ளிட்ட 10 கடல் பகுதிகளில் மதுரை, காரைக்குடி பகுதி கல்லூரி மாணவ, மாணவியா் பறவைகளைக் கணக்கெடுத்தனா்.

ADVERTISEMENT

இப்பணியை மதுரை இறகுகள் அறக்கட்டளையினா் ஒருங்கிணைத்தனா்.

முதல் கட்ட கணக்கெடுப்பில் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த பறவைகள் உள்ளிட்ட 27 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. வரும் 12, 13 ஆகிய நாள்களில் (சனி, ஞாயிறு) இரண்டாம் கட்டப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதில் நீா் நிலைப் பறவைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. தோ்த்தங்கால், காஞ்சிரங்குளம், சித்திரக்குடி, சக்கரக்கோட்டை, மேல, கீழச்செல்வனூா், உத்திரகோசமங்கை, மல்லல், ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய், மேலமந்தை ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் எனவும் கணக்கெடுப்புக்கான பயிற்சி வரும் 12 ஆம் தேதி ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெறும் என்றும் வன உயிரினக்காப்பாளா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT