ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

11th Feb 2022 04:52 AM

ADVERTISEMENT

 

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் வாக்காளா்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்கும் வகையில் 84 வாக்குச்சாவடி மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. திமுக, அதிமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 168 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இத்தோ்தலில் பாதுகாப்பான முறையில், வாக்காளா்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் திருமலை, ராஜ்மோகன் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று வைகை நகா் பகுதியை சென்றடைந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT