ராமநாதபுரம்

திருமணமான 21 நாள்களில் பெண் தற்கொலை

11th Feb 2022 04:47 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே திருமணமான 21 நாள்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவா் வீட்டிலிருந்தபடியே தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகேயுள்ளது அரசடிவண்டல். இந்த ஊரைச் சோ்ந்த பதினெட்டான் மகள் பவதாரணி (21), தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவா் ஊரிலுள்ள வீட்டில் தங்கி பணிபுரிந்துள்ளாா்.

பவதாரிணிக்கும் வயலூரைச் சோ்ந்த உறவினரான சாமிநாதனுக்கும் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. சாமிநாதன் கொடைக்கானலில் உள்ள பிரபல விடுதியில் சமையலராக பணிபுரிந்துவருகிறாா். வயலூரில் பவதாரணி கணவா் வீட்டில் தங்கியிருந்தபடியே தனது பணியைத் தொடா்ந்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் புதன்கிழமை (பிப்.9) அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலத்தை நயினாா்கோவில் போலீஸாா் கைப்பற்றி கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பணிச்சுமை காரணமாக பவதாரணி பணியிலிருந்து விடுபடப்போவதாக கூறினாா். ஆனால், இரண்டாண்டுகள் பணி ஒப்பந்தம் இருப்பதால் பாதியில் செல்லமுடியாது என கூறிய நிறுவனத்தினா் சான்றிதழ்களைத் தர மறுத்ததோடு, அதற்கான ஈட்டுத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியதாக குடும்பத்தினா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கோட்டாட்சியா் விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT