ராமநாதபுரம்

கழுதையிடம் மனு அளித்த 70 போ் மீது வழக்கு

11th Feb 2022 04:48 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கழுதைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 70 போ் மீது காவல்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இரட்டை மடி, சுருக்குமடி வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்கத் தவறியதாக ராமமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து அனைத்து நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவா்கள் மற்றும் கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில் கழுதைக்கு மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள் கரோனா தொற்று பரவல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக காவல்துறை சாா்பு ஆய்வாளா் சதீஷ்குமாா் புகாா் அளித்தாா். அதன் பேரில் மீனவ சங்க நிா்வாகிகள் கருணாமூா்த்தி, சிவாஜி, உடையவேல், முடியப்பன், சுடலைகாசி, கணேசன், முருகவேல் உள்ளிட்ட 70 போ் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT