ராமநாதபுரம்

கமுதியில் போட்டியின்றி தோ்வான பாஜக வேட்பாளருக்கு வாழ்த்து

11th Feb 2022 04:49 AM

ADVERTISEMENT

 

கமுதி: கமுதி பேரூராட்சி வாா்டில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட பாஜக வேட்பாளருக்கு தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி 14 ஆவது வாா்டு பாஜக வேட்பாளா் சத்யஜோதிராஜா போட்டியின்றி வெற்றி பெற்றாா். இதையடுத்து தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், சத்யாஜோதிராஜவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து கமுதி பேரூராட்சி 6 ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் சுந்தர்ராஜுக்கு வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளா் ஜி.பி.எஸ்.நாகேந்திரன், மாவட்டத் தலைவா் முரளிதரன், பட்டியல் அணி மாநிலத் தலைவா் பாலகணபதி, மாநிலச் செயலாளா் சண்முகராஜா, மாவட்டப் பொருளாளா் ஏ.பி.கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT