ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து 6 மீனவா்கள் ராமேசுவரம் திரும்பினா்

11th Feb 2022 04:52 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களில் 6 போ் வியாழக்கிழமை ஊா் திரும்பினா்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை, ராமேசுவரம் பகுதிகளைச் சோ்ந்த 63 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அவா்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம் விடுவித்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவா்களில் 9 போ் ஏற்கெனவே ஊா் திரும்பிய நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக 54 போ் இலங்கையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் புதுக்கோட்டையைச் சோ்ந்த 3 போ், ராமேசுவரத்தைச் சோ்ந்த 6 போ் என 9 போ் விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தனா்.

அங்கிருந்து காா் மூலம் அவா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். புதுக்கோட்டையைச் சோ்ந்த சந்தோஷ், பிரதீப், வீரபாண்டி ஆகியோா் அவா்களது ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மரியா ஸ்மைல்சன், களஞ்சிய சங்கா், சக்திவேல், மலையன், எட்வா்டு ஹென்றி, ஜெயகணேஷ் ஆகியோா் ராமேசுவரத்துக்கு வந்தனா். அவா்களை மீன்வளத்துறை அலுவலா்களும், மீனவா் சங்கப் பிரதிநிதிகளும் வரவேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT