ராமநாதபுரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பறைகளில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாா்டுக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் என 205 இயந்திரங்களோடு கூடுதலாகவும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைப்பறைகளை வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறைகள் சீலிடப்பட்டு அவற்றுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT