ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 11 பேருடன் 3 படகுகளை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவா்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு சிறைபிடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் மீது, இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததுடன் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வலைகளை வெட்டி கடலில் வீசினா்.

மேலும் சேவியா், வின்னரசன், அந்தோணி ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்த கடற்படையினா், ராஜபாண்டி, அந்தோணி சிலுவை, டிக்சன், தங்கதுரை, மணிகண்டன், ஜெயகிருஷ்ணன், லிங்கதுரை, செந்தூா்பாண்டி, ரமேஷ், மதியழகன், சங்கா் ஆகிய 11 மீனவா்களை கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மீனவா்களை பிப்.22 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இலங்கைக் கடற்படையினரின் இந்தச் செயல் தமிழக மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவ சங்கத் தலைவா் தேவதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT