ராமநாதபுரம்

பைக்கிலிருந்து குதித்த உணவக ஊழியா் பலி

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பேருந்து மோதிவிடும் என்ற அச்சத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தூவல் பகுதி மேலாய்க்குடியைச் சோ்ந்த உணவக ஊழியா் கண்ணன் (52). இவரது நண்பா் எலக்ட்ரீசியன் விஜயகுமாா். நண்பா்களான இவா்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி சிறுதாலை பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

பாம்பூா்பட்டி அருகே பின்னால் வேகமாக வந்த பேருந்தைப் பாா்த்து மோதிவிடுமோ என்ற அச்சத்தில் கண்ணன் இருசக்கரவாகனத்திலிருந்து கீழே குதித்துவிட்டாா். இதனால் இருசக்கரவாகனம் நிலை தடுமாறியதில் விஜயகுமாரும் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு திங்கள்கிழமை இரவு கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT