ராமநாதபுரம்

வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் சங்கா்லால்குமாவத் ஆய்வு

1st Feb 2022 09:08 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சத் திட்டப்பணிகளை ஆட்சியா் சங்கா்லால்குமாவத் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வை மேற்கொண்டாா்.

இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 81.55 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.கழூகூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக் குட்டை பணியினையும், அந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளகழிவுநீா் கால்வாய் பணியினையும் பாா்வையிட்டாா். சித்தாா்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் பணி, புல்லங்குடி பண்ணைக்குட்டை உள்ளிட்ட பணிகளையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT