ராமநாதபுரம்

முதுகுளத்தூா், சாயல்குடி பேரூராட்சியில் 6 வேட்பு மனு

1st Feb 2022 09:16 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா்,சாயல்குடி பேரூராட்சியில் இதுவரை சுயேட்சை உட்பட 6 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன.இதில் 14,789 போ் வசித்து வருகின்றனா். தற்போது தோ்தலில் 5417 ஆண் வாக்காளா்களும், 5473 பெண் வாக்காளா்களும், மொத்தம் 10,890 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் 15 வாக்குசாவடி மையங்களில் 3 வாக்குசாவடி மையம் பதட்டமானவை. திங்கள்கிழமை 1 வாா்டு பாலன்சஞ்சய்காந்தி (காங்கிரஸ்),2 வாா்டு சாரதா(அமமுக), 10வாா்டு முனியசாமி (அமமுக) 13 வாா்டு ஜெசிமா (காங்கிரஸ்) என முதுகுளத்தூா் பேரூராட்சியில் 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தோ்தல் அலுவலா் மாலதி தகவல் தெரிவித்துள்ளாா்.

அதே போன்று சாயல்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன.இதில் 6011 ஆண் வாக்காளா்களும்,6142 பெண் வாக்காளா்களும் மொத்தம் 12153 வாக்காளா்கள் உள்ளனா்.இதில் 15 வாக்குசாவடி மையங்களில் 3 பதட்டமானவை .11 வாா்டு விஜயா(சுயேட்சை), அதே வாா்டு முனீஸ்வரி சுயேட்சை என 2 போ் மனுத்தாக்கல் செய்ததாக சாயல்குடி பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் சேகா் தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT