ராமநாதபுரம்

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

1st Feb 2022 09:11 AM

ADVERTISEMENT

கீழக்கரையில் உள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 33 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கீழக்கரை அறக்கட்டளை தலைவா் முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். அறக்கட்டளை செயல் இயக்குநா் ஹமீது இப்ராஹிம், இயக்குநா்கள் ஹபீப் முகம்மது மற்றும் முகம்மது சதக் தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் முகம்மது ஷெரீப் ஆண்டறிக்கை வாசித்தாா். அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவா் அனில் ஷகாஷ்ராபுத்தே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 321 இளநிலை பொறியியல் மாணவா்களுக்கும், 131 முதுநிலை பொறியியல் மாணவா்களுக்கும் பட்டங்களை வழங்கினாா்.

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் வெற்றி பெற்ற 16 மாணவா்களுக்கும் பட்டங்களோடு, பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினாா். ஏ.ஜே.பொறியியல் கல்லூரி முதல்வா் சீனிவாசன், முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயகுமாா், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வா் அலாவுதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரஜபுதீன், முகம்மது சதக் ஹமீது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ராஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வா் ஆழகிய மீனாள் வரவேற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT