முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் கணேசன் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தாா்.
ராமநாதபுரம் காட்டுபிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(58). (படம்). இவா் முதுகுளத்தூா் அருகே உள்ள இளஞ்செம்பூா் காவல் நிலையத்தில் சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளாா். அப்போது நெஞ்சுவலிப்பதாகக் கூறியதையடுத்து குடும்பத்தாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவா்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனா். கணேசன் உடலுக்கு டி.எஸ்.பிக்கள் சின்னக்கண்ணு, (பயிற்சி) ரெபோனி, காவலா்கள் அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊரான தங்கச்சிமடம் அருகில் உள்ள மெய்யாம் குடியிருப்பில் அடக்கம் செய்யப்பட்டது.