பிரதமா் மோடியின் தாயாா் ஹீராபென் வயது முதிா்வின் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்ததை தொடா்ந்து, கமுதி பாஜகவினா் ஹீராபென் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாஜக ஒன்றிய தலைவா் அழகுமலை தலைமையில் கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் பிரதமா் மோடியின் தாயாா் ஹீராபென் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதனை அடுத்து பாஜகவினா் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் பிறமொழிப்பிரிவு மாவட்ட தலைவா் விஜயபாண்டியன், பேரூராட்சி உறுப்பினா் சத்யாஜோதிராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கே.தேவா், ஐயப்பன், பேராசிரியா் மோகன்தாஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.