ராமநாதபுரம்

முதியவரை தாக்கிய 2 போ் மீது வழக்கு

11th Dec 2022 11:27 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே கண்மாயிலிருந்து தண்ணீா் எடுத்தது தொடா்பான பிரச்னையில் முதியவரை தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருப்பாலைக்குடி அருகே மேல்மருதூா் கிராமத்தில் உள்ள கண்மாய் தண்ணீரை யாரும் மோட்டாா் வைத்து உறிஞ்சி விவசாயத்துக்கு பயன்படுத்தக் கூடாது என அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், அதே ஊரை சோ்ந்த கணேசன் (60), ராஜேஸ் (35) ஆகிய இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி தங்களது நிலத்தில் பாய்ச்சினா்.

இதை அதே ஊரைச் சோ்ந்த இருளையா மகன் செல்வராஜ் (56) தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த கணேசன், ராஜேஸ் இருவரும் செல்வராஜை தாக்கினாா்களாம்.

ADVERTISEMENT

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் கணேசன், ராஜேஸ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT