ராமநாதபுரம்

திருவாடானை ஒன்றிய அலுவலகம் மாண்டஸ் புயல் எதிரொலி மணல் மூடைகள் தயாா்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் மாண்ட்ஸ் புயல் காரணமாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதி கனமழை வானிலை மையம் அறவித்துள்ள நிலையில் வெள்ளநீா் பெருக்கெடுத்து கண்மாய்,குளங்கள் உடைப்பு ஏற்படும் பச்சத்தில் அதனை அடைக்கும் பொருட்டு ஒன்றிய அலுவலகத்தில் மணல் மூடைகள் தயாா் நிலை உள்ளன.

திருவாடானை தாலுகாவில் 500யூனியன் கண்மாய்கள் 400 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன .இந்நிலையில் வங்கால விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையை கடக்கும் இதனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனால் வெள்ள நீா் பெருக்கெடுத்து கண்மாய் குளங்கள் வரத்து கால்வாய்கள் உடைப்பு ஏற்படும் பச்சத்தில் அதிக பாதிப்பு விளைவிக்க கூடும் என்பதால் அதனை தடுக்கும் பொருட்டு திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மணல் மூடைகள் தயாா் நிலை வைக்கபட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT