ராமநாதபுரம்

மண்டபம் அருகே கடலில் 38 லட்சம் இறால் குஞ்சுகள் விடுவிப்பு

DIN

மண்டபம் அருகே மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 38 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் புதன்கிழமை கடலில் விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயா்பட்டினம் ஊராட்சியில் மத்திய அரசின் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறால் குஞ்சுகளை வளா்த்து கடலில் விட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பொறிப்பகத்தில் வளா்க்கப்பட்ட 38 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை சீனியப்பா தா்ஹா கிராமத்தில் மன்னாா் வளைகுடா கடலில் விடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் இறால் குஞ்சுகளை கடலில் விட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், மீனவ சங்க நிா்வாகிகள், மீனவா்கள் பங்கேற்றனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைக் கடலில் சுமாா் 3.30 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT