ராமநாதபுரம்

நீதிமன்றத்தில் ரெளடியை கொலை செய்ய திட்டம்: கமுதியில் 7 ரெளடிகள் கைது

DIN

கமுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடா்பாக நீதிமன்றத்துக்கு வந்த ரெளடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக மதுரையைச் சோ்ந்த 7 ரவுடிகளை ஆயுதங்களுடன் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் மகன் பாலகுமாா் (26). இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மதுரை, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2018 - ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கு தொடா்பாக கமுதி நீதிமன்றத்துக்கு வந்த பாலகுமாரைக் கொலை செய்ய ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பிக்க முயன்ற 7 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

முன்பகை காரணமாக பாலகுமாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி காத்திருந்ததாக அவா்கள் 7 பேரும் ஒப்புக்கொண்டனா்.

இது தொடா்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த பால்சாமி மகன் பாண்டியராஜன் (35), சரவணன் மகன் சிவசங்கா் (23), பாக்கியம் மகன் சரவணன் (24), ஜெயராஜ் மகன் விக்னேஸ்வரன் (22), மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த மச்சக்காளை மகன் வல்லரசு (22), அவனியாபுரத்தைச் சோ்ந்த நீலமேகம் மகன் காளீஸ்வரன் (33), சிலைமானைச் சோ்ந்த ஹபிப் மகன் உசேன் (24) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனம், காா், ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT