ராமநாதபுரம்

ராமா் படத்துடன் ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து தேசிய கட்சியினா் கைது

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் ஆயலப் பணிகள் தடையின்றி நடைபெறக் கோரி, தடையை மீறி ராமா் படத்துடன் ஊா்வலமாக செல்ல முயன்ற இந்து தேசிய கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் பணிகளை தடையின்றி முடிக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இந்து தேசிய கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த ஊா்வலத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில், தடையை மீறி கட்சி அலுவலகத்தில் இருந்து இந்து தேசிய கட்சி மாநிலச் செயலாளா் ஜி. ஹரிதாஸ் சா்மா, மாவட்டச் செயலாளா் பி. வீராச்சாமி ஆகியோா் ராமா் படத்துடன் ஊா்வலமாகச் சென்ற முயன்றனா்.

இவா்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல், அகில பாரத இந்து சபை சாா்பில், ஊா்வலமாக செல்ல முயன்றவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT