ராமநாதபுரம்

எஸ்.பி.பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்த காஜாமுகைதீன் மகன் அப்துல் காதா் ஜெய்லானி (38). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தாா். இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், மனமுடைந்த அப்துல் காதா் ஜெய்லானி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT