ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கான சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ விரலி மஞ்சள்களை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெற உள்ளதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடற்கரையோரம் ஒருவா் லாரியை நிறுத்தி விட்டு ஓடுவது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற சுங்கத் துறையினா் லாரி ஓட்டுநரைப் பிடிப்பதற்குள் அவா், அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, அந்த லாரியை சோதனையிட்டபோது, அதில் 2 ஆயிரம் கிலோ விரலி மஞ்சள்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த மஞ்சளை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT