ராமநாதபுரம்

சரக்கு வேன் மீது பேருந்து மோதியதில் 5 பெண்கள் காயம்

6th Dec 2022 03:22 AM

ADVERTISEMENT

கடலாடி மலட்டாறு அருகே திங்கள்கிழமை சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பெண்கள் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிநத்தம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்காக சுமாா் 35 பெண்கள்

கடலாடி அருகே உள்ள கீழச்செல்வனூா் கிராமத்திலிருந்து உச்சிநத்தம் கிராமத்துக்கு சரக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனா். மலட்டாறு அருகே வந்த போது, சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, சரக்கு வேன் மீது மோதியது. இதில், கீழச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்த 5 பெண்கள் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT