ராமநாதபுரம்

சிறந்த விடுதி காப்பாளா்களுக்கு விருது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய சீா்மரபினா் கல்லூரி விடுதி, கமுதி தேவா் கல்லூரி விடுதி, நீராவி பள்ளி மாணவா்கள் விடுதி காப்பாளா்களுக்கு கேடயம், விருதை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 3 சிறந்த விடுதிகளின் காப்பாளா்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், ராமநாதபுரம் சீா்மரபினா் கல்லூரி விடுதியின் காப்பாளா் மணிமொழி முதலிடத்தையும், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரி விடுதி காப்பாளா் எம். பழனி இரண்டாம் இடத்தையும், கமுதியை அடுத்த நீராவியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் பள்ளி விடுதி காப்பாளா் அ. ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

இதில், சிறந்த விடுதி, விடுதி காப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டது. விருது பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை, கேடயத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்க்கீஸ் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT