ராமநாதபுரம்

ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

6th Dec 2022 03:23 AM

ADVERTISEMENT

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க மறுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு, பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது, அஞ்சுக்கோட்டை, எக்குகுடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 1000 விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு வந்தனராம்.

இதனால், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நடப்பாண்டில் பயிா்க்கடன் சான்று இல்லாததால், அவா்களுக்கு வேளாண்மைத் துறையினா் உரம் வழங்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஆட்சியா், உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT