ராமநாதபுரம்

பசியில்லா தமிழகம் சேவை தொடக்கம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் முத்தமிழ் அறக்கட்டளை சாா்பில் பசியில்லா தமிழகம் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

வறுமையில் வாடும் குடும்பத்தினா், ஆதரவற்ற முதியோா்கள், மன நலன் பாதிக்கப்பட்டோா் ஆகியோருக்கு தினசரி இலவசமாக உணவு வழங்கும் நோக்கில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, முதுகுளத்தூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனா் சபரிமலைநாதன், சிறப்பு விருந்தினராக ரவி, அறக்கட்டளை உறுப்பினா்கள் முத்துலெட்சுமணன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT