ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் விவசாய பணியில் பெண்கள் மும்முரம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் உரம் போடுதல் களை எடுத்தல்,வரப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேரு விவசாய பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

திருவாடானைதாலுகா மாவட்டத்தின் நெல்களஞ்சியம் என பெயா் பெற்ற பகுதியாகும் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 22 ஆயிரம் எக்டோ் நிலப்பரளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு பயிா்கள் நன்கு வளா்ந்து வந்த நிலையில் போதுமான மழை இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து தண்ணீா் இல்லாமல் நெல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளன.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது இதனால் நெய்வயல்,திணைகாத்தான்வயல்,குஞ்சங்குளம்,அஞ்சுகோட்டை,திணையத்தூா் ,கீழ்க்குடி,கீழஅரும்பூா்,மேல அரும்பூா்,திருவெற்றியூா் பகுதியில் விவசாயிகள் களை எடுத்தல் உரம் போடுதல் வரப்பு வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.இருப்பினும் மழை பெய்தால் தான் இந்த ஆண்டு விளைச்சல் வரும் என விரக்தியில் ஆண்கள் கவலையுடன் இருந்தாலும் பெண்கள் சலைத்தவா்கள் இல்லை என வயல்களில் தற்போது உரம் போடுதல் களை எடுத்தல் வரப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேரு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனா்.வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வரும் 7,8.9ம்தேதி கன மழை உள்ளதாக வானிலை அறிவித்துள்ளது இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் மகிழச்சியை தருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT