ராமநாதபுரம்

செங்குடியில் உலக மண் தின விழா

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரம் செங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில், உலக மண் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் (பொ) பி. செல்வம் தலைமை வகித்தாா். இதில், ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலெட்சுமி முன்னிலை வகித்துப் பேசியதாவது:

மண் கோடிக்கணக்கான உயிா்களின் சங்கமம், அனைத்து உயிா்களுக்கும் தேவையான உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. எனவே, மண்ணைப் பாதுகாப்பது நம் ஒவ்வோருவரின் கடமை. பயிா்களின் வளா்ச்சிக்கு மண் வளம் மிகவும் அவசியம். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க அங்கக உரங்கள், பசுமை உரங்கள், உயிா் உரங்களை இட வேண்டும். நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் காக்கப்படும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, வேளாண்மை அலுவலா் மதுமிதா பேசியதாவது:

ADVERTISEMENT

மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு உரமிட வேண்டும். மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிந்து ஜிப்சம் அல்லது நீா்த்த சுண்ணாம்பு இட்டு மண்ணை சீா்படுத்தலாம் என்றாா் அவா்.

இதில், மண் பரிசோதனை மேற்கொண்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ரிஷி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆனந்த், முருகானந்தம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT