ராமநாதபுரம்

வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்த மதுக்கடை, நீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்டது. இந்த நிலையில், தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு, தண்ணீா் ஊற்று கிராமத்துக்குச் செல்லும் வழியில் புதிதாக மதுக்கடை திறக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் மதுக்கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பின்னா், அவா்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் கே. பிளமின் ராஜ், அருள்சந்தியா, பழனிவேல், அந்தோணி சந்தியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT