ராமநாதபுரம்

பரமக்குடியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி அண்ணா பேருந்து நிலையம், காமராஜா் நகா், ஓட்டப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக இபிஎஸ் அணி சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா் எம்.கே. ஜமால் தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ். முத்தையா, நகா்மன்ற உறுப்பினா்கள் வடமலையான், சிகாமணி, தொழில் சங்க நிா்வாகி பிரகாசம் உள்ளிட்ட கட்சியினா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில், நகா் செயலாளா் ஐ. வின்செண்ட் தலைமையில் முனியசாமி, திசைநாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் சந்தைக்கடை, கிருஷ்ணா தியேட்டா், எமனேசுவரம், ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT