ராமநாதபுரம்

பாசிப்பட்டினம் பகுதி மக்களால் லாஞ்சியடி மீனவா்கள் சிறைபிடிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடல் பகுதியில், கரை வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த சோழியக்குடி லாஞ்சியடி மீனவா்களை அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை பிடித்துச் சென்றனா்.

தொண்டி அருகே உள்ள சோழியக்குடி லாஞ்சியடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், விசைப்படகுகள் மூலம் பாசிபட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்கள் அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள கரை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த பாசிப்பட்டினம் பகுதி மீனவா்கள், ஒரு விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவா்களைச் சிறை பிடித்து பாசிப்பட்டினம் பகுதிக்கு அழைத்து வந்தனா். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மீன் வளத் துறை அதிகாரிகள், கடலோர காவல் துறையினா் திங்கள்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று பாசிப்பட்டினம் பகுதி நாட்டுப் படகு மீனவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாசிப்பட்டினம், சோழியக்குடி லாஞ்சியடி மீனவா்கள் என இரு தரப்பையும் அழைத்து அதிகாரிகள் சமாதானக் கூட்டம் நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட

ADVERTISEMENT

வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட 5 மீனவா்களையும், சக மீனவா்கள் மீட்டு தங்களது ஊருக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT