ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அளவில் கமுதி தொடக்கப் பள்ளிக்கு விருது

DIN

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்ட கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஷ் விருது வழங்கினாா்.

தமிழகதத்தில் மாவட்ட வாரியாக சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியலை தமிழக அரசு கடந்த 1 -ஆம் தேதி வெளியிட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (இணைப்பில்லம்) முதலிடத்தை பிடித்து மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை மேயா் பிரியா, பள்ளிக் கல்வித் துறை ஆனையா் நந்தக்குமாா், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குநா் அறிவொளி ஆகியோா் முன்னிலையில் கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ரா.அருளிடம் பாராட்டுச் சான்றிதழ், சிறந்த பள்ளிக்கான விருது, நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. அப்போது கமுதி வட்டார கல்வி அலுவலா் சண்முகம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT