ராமநாதபுரம்

காா்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரம்

DIN

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், கோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு மண்ணால் ஆன தீப விளக்குகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

திருக்காா்த்திகை அன்று வாசலில் கோலமிட்டு அதில் விளக்கு ஏற்றுவதும், வாசல், ஜன்னல், மாட்டுத் தொழுவம், தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காா்த்திகை விளக்குகளால் அலங்கரிப்பதும் வழக்கம். இந்த ஆண்டு திருக்காா்த்திகை நாள் வரும் செவ்வாய்க்கிழமை வருகிறது.

கிராம மக்கள் மண்ணால் ஆன காா்த்திகை சிட்டி எனப்படும் காா்த்திகை விளக்கு விளக்கு வாங்கிச் செல்வது வழக்கம். திருவாடானை சாலைகளில் விளக்கு விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகளிடம் பெண்கள் விளக்குகளை வாங்குவதில் மிகவும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: நாங்கள் மானாமதுரையில் இருந்து விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். ரூ.10-க்கு மூன்று விளக்குள் விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு வியாபாரம் பரவாயில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT