ராமநாதபுரம்

கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டம்: ஆதாா் எண்ணைப் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

4th Dec 2022 01:01 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஆதாா் எண்ணைப் பதிவு செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தின் கீழ், உதவித் தொகையாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தொடா்ந்து பயன்பெற ஆதாா் எண்ணை இணைப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 13- ஆவது தவணையாக, அதாவது 2022 டிசம்பா் முதல் 2023 மாா்ச் முடிய உள்ள காலத்துக்கான தவணைத் தொகை, ‘பி.எம். கிசான்’ இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ, தங்களது கைப்பேசி மூலமாகவோ ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இது தொடா்பாக கூடுதல் விவரம் பெற விரும்பினால், வட்டார வேளாண்மை அல்லது தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT