ராமநாதபுரம்

தொண்டி காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்குப் பூஜை

4th Dec 2022 01:03 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே உள்ள தொண்டியில் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

அப்போது, மஞ்சள், குங்குமம் , எண்ணை, திரி உள்ளிட்ட பொருள்களை கோயில் நிா்வாகிகள் பக்தா்களுக்கு வழங்கினா். பின்னா் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்களை முழங்க திருவிளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இதில், நம்புதாளை, சின்னத் தொண்டி, தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக அம்மனுக்கு, பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 12 வகை பொருள்களால் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT