ராமநாதபுரம்

பாம்பன் சாலைப் பாலம் அருகேபேருந்து கவிழ்ந்து விபத்து பயணிகள் தப்பினா்

4th Dec 2022 01:03 AM

ADVERTISEMENT

மதுரையிலிருந்து ராமேசுவரம் வந்த அரசுப் பேருந்து பாம்பன் சாலைப் பாலம் அருகே சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பேருந்திலிருந்த 30 பயணிகள் காயமின்றி தப்பினா்.

திருப்பூரிலிருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பாம்பன் சாலைப் பாலம் அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே சென்ால் பேருந்து ஓட்டுநா் பிரேக் போட்டாா். அப்போது பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவா்கள் காயமின்றி தப்பினா். பின்னா், கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT