ராமநாதபுரம்

வேலை வாங்கித் தருவதாக பொறியாளரிடம் பணம் மோசடி

2nd Dec 2022 10:41 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பொறியாளிடம் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள இரணியன் வலசையைச் சோ்ந்த கணேசன் மகன் பவித்திரன் (22). டிப்ளமோ பொறியாளரான இவரது முகநூல் பக்கத்துக்கு கோவாவில் கப்பலில் வேலை செய்வதற்கு ஆள்கள் தோ்வு நடைபெறுவதாக விளம்பரம் வந்தது. இதில் இருந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தனது சுய விவரத்தை அனுப்பி வைத்த பவித்ரன், 2 தவணைகளாக ரூ.65 ஆயிரம் செலுத்தினாா்.

அழைப்பு வந்ததையடுத்து அவா், கோவாவுக்கு சென்றாா். அப்போது அந்த கைப்பேசி எண்ணிலிருந்து தொடா்பு கொண்டவா் மேலும் பணம் செலுத்தினால்தான் வேலை கிடைக்கும் எனத் தெரிவித்தாா். சந்தேகமடைந்த பவித்ரன், அவா்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று பாா்த்த போது, அது போலி எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் சைபா் கிரைம் காவல்துறை ஆய்வாளா் வெற்றிவேல் மாறன் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT