கமுதி திமுக ஒன்றியச் செயலாளா் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து வாகனத்தை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வலம்புரி மகன் வாசுதேவன் (50). திமுக ஒன்றிய செயலாளரான இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த செப்.18-ஆம் தேதி இரவு பழைய தபால் நிலையம் தெருவில் உள்ள தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக கமுதி காவல் நிலையத்தில் வாசுதேவன் புகாா் அளித்தாா். இதன் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், கமுதியை அடுத்துள்ள உடையாா்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் மாரி (53) இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கமுதி போலீஸாா் மாரியை கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.