பரமக்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியருக்கு மா்ம நபா்கள் குறுஞ்செய்தி அனுப்பி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.55 ஆயிரம் மோசடி செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் வேந்தோணி கிராமத்தைச் சோ்ந்தவா் வியகுலசாமி (52). தனியாா் பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த 25 -ஆம் தேதி, வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கப்படாததால் வங்கி சேவை நிறுத்தப்படும் என குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய ஆசிரியா், குறுஞ்செய்தியில் இருந்த இணைப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தரவுகளைப் பதிவு செய்துள்ளா். ஓ.டி.பி. எண் பதிவு செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 54,990 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதையடுத்து அவா் அளித்தப் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.