ராமநாதபுரம்

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டி

2nd Dec 2022 10:42 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கு தொடக்கக் கல்வி அலுவலா் முருகம்மாள் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சந்தனவேல், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மோகன வள்ளி, நுகா்வோா் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போட்டியில் மொத்தம் 27 பள்ளிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT